1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 21 ஜூன் 2019 (13:15 IST)

வாட் இஸ் திஸ் மிஸ்டர் ராகுல்!! இப்ப போன் ரொம்ப அவசியமா? கடுப்பான பாஜவினர்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிக் கொண்டிருந்த போது ராகுல் காந்தி மொபைல் பார்த்துக்கொண்டிருந்தது சர்ச்சையாகியுள்ளது. 
 
மக்களவை தேர்தல் முடிந்த நிலையில் துவங்கப்பட்ட மக்களவை கூட்டத்தொடரில் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகள் பற்றிய முக்கிய உரையை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். 
 
குடியரசுத் தலைவரின் உரையின் போது ராகுல் காந்தி, தனது மொபைல் போனை பார்த்துக்கொண்டிருந்தார். இது வீடியோவாக வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பாஜகவினர் பலர் இதனால் கடுப்பாகினர். 
மத்திய அமைச்சர் கிரின் ரிஜூஜூ, பாபுல் சுப்ரியோ ஆகியோர் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், காங்கிரஸை சேர்ந்த மூத்த தலைவர் ஆனந்த் ஷர்மா, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசும்போது, இந்தியில் சில கடினமான, ஆழமான அர்த்தங்கள் கொண்ட வார்த்தைகளைப் பயன்படுத்தினார். எனவே அவற்றிற்கு அர்த்தங்களை தனது போனில் தேடிப்பார்த்தார் என விளக்கமும் அளித்துள்ளார்.