1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vijay has given mla seat to admk and bjp mlas

அதிமுக, பாஜக எம்.எல்.ஏக்களுக்கு தவெகவில் சீட்!.. கொள்கை என்னாச்சி?!...

vijay
தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கிய போது திமுக எங்களின் அரசியல் எதிரி, பாஜக எங்களின் கொள்கை எதிரி என விஜய் அறிவித்தார். அதன்பின் பேசிய பல மேடைகளிலும் திமுகவை மட்டுமே தொடர்ந்து கடுமையாக விமர்சித்து பேசி வந்தார். இதையடுத்து விஜய் திமுகவை மட்டுமே பேசுகிறார், அதிமுக, பாஜக கட்சிகள் பற்றி பேசுவதில்லை என்கிற விமர்சனம் எழுந்தது. அதற்கு பதில் சொன்ன விஜய் ‘தற்போது நடக்கப்போவது சட்டமன்றத் தேர்தல்.. தமிழகத்தில் ஆட்சியில் இருப்பது திமுக.. எனவே அந்த கட்சி பற்றி மட்டுமே பேசமுடியும்’ என்றார்..

அதேநேரம், அதிமுக பாஜகவின் அடிமையாக இருக்கிறது. தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் நிலவுகிறது.. எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவும் வளர்த்த அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்து விட்டார்கள் என்பது போல மறைமுகமாக பேசினார் விஜய். அதன்பின்னரே அதிமுகவினரும் விஜயை விமர்சிக்க தொடங்கினார்கள். இந்நிலையில்தான் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் பட்டியலை இன்று காலை வெளியிட்டார் விஜய்..

பாஜக முன்னாள் எம்.ல்.ஏ சாமிநாதனுக்கு லாஸ்பேட்டை தொகுதி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ அசனாவுக்கு காரைக்கால் தொகுதியும், பாஜக முன்னாள் அமைச்சர் சாய் சரவணன் குமாருக்கு திருபுவனை தொகுதியும், பாஜக முன்னாள் நிர்வாகி ராமுவுக்கு முத்தியால்பேட்டை தொகுதியும், பாஜக ஆதரவு முன்னாள் சுயேட்சை எம்.எல்.ஏ பிரகாஷ் குமாருக்கு முத்தியால்பேட்டை தொகுதியும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பெரியசாமிக்கு நெட்டப்பாக்கம் தொகுதியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் அதிமுக, பாஜகவையும் விமர்சிக்கும் விஜய் புதுச்சேரியில் மட்டும் எப்படி அந்த தொகுதியின் முன்னாள் நிர்வாகிகளுக்கும் எம்எல்ஏக்களுக்கும் சீட் கொடுத்தார் என அரசியல் விமர்சனங்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
தேர்தலில் போட்டியில்லை.. பொன்முடி எடுத்த திடீர் முடிவால் திமுகவினர் அதிர்ச்சி..!