1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. bjp sharing its places to bjp for tn election

டிடிவி தினகரனுக்கு நீங்களே சீட் கொடுங்க!.. பாஜகவிடம் கறார் காட்டும் பழனிச்சாமி!...

eps
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்குகிறது. வருகிற 30ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது
. ஆனால் தமிழகத்தின் முக்கிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளிலும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை..

திமுகவை ஒப்பிடும் போது அதிமுக மிகவும் குறைவான கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. அதில் பாஜக மட்டுமே 40க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்கிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு அப்படி கொடுக்க விருப்பமில்லை என சொல்லப்பட்டது.
இந்நிலையில்தான், பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று சென்னை வந்திருக்கிறார்.

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தொகுதி பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அனேகமாக இன்று அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது..

இந்நிலையில், பாஜகவுக்கு 45 தொகுதிகளை அதிமுக கொடுக்க வேண்டும். அதில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 10 தொகுதிகளை பாஜக உள் ஒதுக்கீடு செய்யும் எனத்தெரிகிறது. பாஜகவுக்கு 29 தொகுதிகள் போக மீதமுள்ள தொகுதிகளை தாமாக, ஐஜேகே, புதிய நீதி கட்சிகளுக்கு ஒதுக்க திட்டம் என தகவல் வெளிவந்திருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
அதிமுக, பாஜக எம்.எல்.ஏக்களுக்கு தவெகவில் சீட்!.. கொள்கை என்னாச்சி?!...