1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. admk general body election court order

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தலையிட முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்

court
அதிமுக பொதுக்குழு வரும் 11ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த பொதுக்குழுவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், தமிழ்மகன் உசேன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் வரும் 11-ம் தேதி நடைபெறும் பொதுக் குழு விவகாரத்தில் தலையிட முடியாது என்றும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க தனி நீதிபதியை தான் அணுக வேண்டும் என்றும் சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
இதனை அடுத்து ஓபிஎஸ் தரப்பு தனி நீதிமன்ற தனி நீதிபதியை அணுகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
அடுத்த கட்டுரையில்
16 எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்: மகாராஷ்டிரா சபாநாயகரிடம் மனு