1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Poster supporting OPS in Vatthalakundu

ஈபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கம் - திண்டுக்கலில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக போஸ்டர்!

Vatthalakundu
திண்டுக்கல் மாவட்டத்தில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக முதன்முறையாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
அதிமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் கூடியபோது அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பொதுக்குழு கூட்டம் சிறிது நேரத்தில் முடிவடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அவை தலைவர் தமிழ்மகன் கூறியது ஓபிஎஸ் தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்கூட்டம் இடம் மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியன நிலையில் பின்னர் அதிமுக பொதுக்கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறும் என கூறப்பட்டது.
 
இதனைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் கொரோனா மேலும் அதிகரித்து வருவதால் ஆன்லைன் முறையில் பொதுக்குழுவை நடத்த பரீசலீக்கப்பட்டு வருகிறது. பொதுக்குழு கூட்டம் குறித்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரை கட்சியை விட்டு நீக்குவதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதோடு கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரை தலைமைக் கழகத்திலிருந்து நீக்கி விட்டோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!