திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 ஜூலை 2022 (08:28 IST)

அதிமுக அலுவலகம் செல்லும் சசிக்கலா? – திடீர் அறிவிப்பால் பரபரப்பு!

அதிமுகவில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வரும் நிலையில் சசிக்கலா கட்சி அலுவலகம் செல்ல உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்டம் சலசலப்பில் முடிந்த நிலையில் ஜூலை 11ம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இதற்கிடையே ஓபிஎஸ் அதிமுகவில் வகித்து வரும் பதவிகளில் இருந்து அவரை நீக்க ஈபிஎஸ் அணி முயற்சிகள் மேற்கொண்டு வருவதால் அதிமுக கட்சியே பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில் இன்று சசிக்கலா தொண்டர்கள் சூழ அதிமுக அலுவலகத்திற்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.