1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified திங்கள், 4 ஜூலை 2022 (13:04 IST)

விரக்தியின் எல்லையில் வைத்தியலிங்கம் - கே.பி.முனுசாமி!

விரக்தியின் எல்லையில் இருப்பதால் அதிமுக பொதுக்குழு நடக்காது என்கிறார் வைத்திலிங்கம் என கே.பி.முனுசாமி பேட்டி. 

 
அதிமுகவில் கடந்த சில வாரங்களாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்பதும், அதிமுக பொதுச் செயலாளர் பதவியை பிடிக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் அதிமுகவில் நடைபெறும் குழப்பங்கள் குறித்து கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக பொதுகுழுவிற்கு சென்று உண்மையை உடைத்த ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் அவர்களின் துணிச்சல் பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார். 
 
அதே நேரத்தில் பணத்துக்கும் பதவிக்கும் அடிமையானவர்கள் தான் ஈபிஎஸ் மக்கள் இருக்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.  இதனைத்தொடர்ந்து கே.பி.முனுசாமி இது குறித்து குறிப்பிட்டுள்ளதாவது, விரக்தியின் எல்லையில் இருப்பதால் அதிமுக பொதுக்குழு நடக்காது என்கிறார் வைத்திலிங்கம்.

அதிமுக பற்றி குறைகூற தகுதியில்லாத டிடிவி தொடர்ந்து விமர்சிப்பதால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.