1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK dismissed some incharges from party

சொல்பேச்சை கேட்காமல் சுயேட்சையாக போட்டி! – மேலும் 16 பேரை நீக்கிய அதிமுக!

Tamilnadu
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட மேலும் 16 பேரை அதிமுக கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பல இடங்களில் போட்டியிட்டது. பல பகுதிகளில் அதிமுக அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து அதிமுகவினர் சிலரே சுயேச்சையாக போட்டியிட்ட சம்பவங்களும் நடந்தன. அவ்வாறு கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டவர்களை அதிமுக கட்சியிலிருந்து நீக்கி வருகிறது.

அந்த வகையில் தற்போது வடபழனி, தி,நகர், அம்பத்தூர், ஆவடி, பாடி, முகப்பேர், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களின் தோல்விக்கு காரணமாக இருந்த அதிமுகவினர் 16 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
ஹிஜாப் தடை தீர்ப்பு; நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்! – இருவர் கைது!