1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu weather report today

ஆறு மாவட்டங்களில் சதமடித்த வெயில்! – மக்கள் அவதி!

Tamilnadu
தமிழ்நாட்டில் கோடைக்காலம் நெருங்கியுள்ள நிலையில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் இந்த மாத இறுதி முதல் கோடைக்கால சீசன் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் திருச்சி, மதுரை, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வீசியுள்ளது.

பொதுவாகவே காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கடும் வெயில் வீசி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். வெயிலிம் கடும் தாக்கம் காரணமாக சாலையோர இளநீர், நுங்கு, தர்பூசணி விற்கும் கடைகள் அதிகரித்துள்ளன. மக்கள் மோர், பானகம், இளநீர், பழச்சாறு போன்றவற்றை அருந்தி தாகம் மற்றும் வெயிலை சமாளித்து வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick