ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 மார்ச் 2022 (10:49 IST)

தமிழகத்தில் கொரோனா 4ம் அலை?? – சுகாதார செயலர் எச்சரிக்கை!

தமிழகத்தில் கொரோனா நான்காவது அலை ஏற்படும் ஆபத்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு முற்றிலுமாக இல்லாமல் உள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது மக்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் அதேசமயம் சீனா, கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அதனால் மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நான்காம் அலை பரவ வாய்ப்புள்ளதாகவும், அதனால் மக்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படியும் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.