தொடர்புடைய செய்திகள்
- ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 ஆயிரம்!.. தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட பழனிச்சாமி..
- கூட்டணிக்கு தலைமை பாஜகதான்!.. அவங்ககிட்டதான் பேசுவோம்!.. பழனிச்சாமியை பழிவாங்கிய டிடிவி!...
- 64 வேட்பாளர்கள் பட்டியல்!.. பிரார்த்தனை செய்த பழனிச்சாமி!. கடவுள் அருள் கிடைக்குமா?..
- ஓகே.. தோல்வி அடைய வாழ்த்துக்கள்!.. திமுகவை நக்கலடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி..
- ராமதாஸுக்கு கூட்டணி கதவை சாத்திய பழனிச்சாமி!.. நடந்தது என்ன?..
அது கருணைத் தொகை இல்லை.. பேரை மாற்றிய அதிமுக!.. தேர்தல் அக்கப்போரு!...
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என அதிமுக திட்டமிட்டு தேர்தல் வேலைகளை தொடங்கியிருக்கிறது.. ஒருபக்கம் இந்த முறையும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என திமுகவும் காய்களை நகர்த்தி வருகிறது.. இரண்டு கட்சிகளும் சில கட்சிகளுடன் கூட்டணியை அமைத்திருக்கின்றன..
இதில் அதிமுகவை விட திமுக கூட்டணி பலமாக இருக்கிறது. ஏனெனில் அந்த கட்சியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தை, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. அதிமுகவில் பாஜக, பாமக (அன்புமணி), அமமுக உள்ளிட்ட சில கட்சிகள் இருக்கின்றன.. அதிமுக கூடணியில் உள்ள கட்சிகளுக்கு பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை.
எனவே தேர்தல் வாக்குறுதிகள் மூலம் வாக்குகளை பெற எடப்பாடி பழனிசாமி திட்டமிடுகிறார் எனத் தெரிகிறது. அதனால்தான் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்.. ஏற்கனவே தமிழக அரசு பேருந்துகளில் ஆண்களுக்கும் இலவச பயணம், பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் உரிமை தொகை 2 ஆயிரம் என்பது உள்ளிட்ட சில தேர்தல் வாக்குறுதிகளை கூறியிருந்தார்..
நேற்று மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் முன்பு மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். அதில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து குடும்பத்திற்கும் 10 ஆயிரம் கருணைத்தொகையாக கொடுக்கப்படும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பட்டதாரிகளுக்கு மாதம் 2 ஆயிரம், ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் கொடுக்கப்படும் போன்ற அறிவிப்புகளை வெளியிட்டார்..
இதில் ஆட்சிக்கு வந்ததும் 10 ஆயிரம் கருணை தொகை கொடுக்கப்படும் என்று சொன்னது சர்ச்சையானது.. ஏனெனில் கருணை என்கிற வார்த்தைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அது கருணைத்தொகை அல்ல.. உதவித் தொகை என அதிமுக மாற்றியிருக்கிறது.