1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. adhava arjuna talk about tvk vijay

ஸ்டாலின் பேசினா 300 வியுஸ்.. எங்க தலைவர் பேசினா!.. தெறிக்கவிட்ட ஆதவ் அர்ஜுனா!...

Aadhav arjuna
தமிழக அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது விஜயின் அரசியல் பிரவேசம். ஒரு நடிகராக விஜய் மக்களிடம் பிரபலமாகியிருக்கிறர் விஜய். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.. குறிப்பாக இளம் வயது ஆண்களும், பெண்களும் விஜய்க்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.

அவர்களின் நம்பித்தான் அரசியல் கட்சி தொடங்கியிருக்கிறார் விஜய். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார் விஜய். அதேநேரம் இதுவரை விஜய் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை.. அதேபோல் எந்த கட்சியும் தவெக பக்கமும் செல்லவில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய கட்சிகளில் 90 சதவீத கட்சிகள் திமுக, அதிமுக என போய்விட்டன.. மீதமிருப்பது தேமுதிக மட்டுமே.. அந்த கட்சி என்ன முடிவு எடுக்கும் என்பது தெரியவில்லை.

விஜய் திமுகவை தோற்கடிக்க விரும்பினால் அவர் அதிமுக பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.. ஆனால் விஜய்க்கு அதில் விருப்பமில்லை.
ஒரு பக்கம் விஜயுடன் இருப்பவர்கள் அவரை புகழ் பாடியே காலி செய்து கொண்டிருக்கிறார்கள் என அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

இந்நிலையில், மற்ற கட்சியிலிருந்து சிலர் இன்று தவெகவில் இணைந்தனர். எனவே இது தொடர்பான இணைப்பு விழா தவெக சார்பில் இன்று நடந்தது. இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா ‘அதிமுக, திமுக போன்ற கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கு மக்களை காசு கொடுத்து கூட்டி வருவார்கள்.. ஆனல, தவெக பொதுக்கூட்டங்கள் மக்கள் அவர்களாகவே திரண்டு வருகிறார்கள்.. தேர்தலின் போது திருவிழா போல வந்து அவர்கள் தவெகவுக்கு வாக்களிப்பார்கள்..

திமுக கட்சியினர் உள்ள வீட்டில் இருப்பவர்கள் கூட நமது தலைவர் விஜய்க்கு வாக்களிப்பார்கள்.. நம்ம சிஎம் பேசினால் யூட்யூபில் 300 பேர்தான் பார்ப்பாங்க.. ஆனா அதே நம்ம தலைவர் விஜய் பேசினா 5 கோடி பேர் பார்ப்பாங்க.. இதுக்கு ஒரு கவர்மெண்ட்.. ஒரு துறை.. ஒரு ஆட்சி.. ஒரு ஐடி விங்’ என பேசியிருக்கிறார்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
திமுக கூட்டணியில் யாருக்கு எவ்வளவு தொகுதிகள்?!.. கசிந்த பட்டியல்..