இன்னும் 10 எம்.எல்.ஏக்கள் விரைவில் தவெகவில் இணையபோறாங்க!.. செங்கோட்டையன் பேட்டி!...
நடிகராக இருந்து தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கியவர் விஜய். 2026 தேர்தலுக்கு முன்பு அதிமுகவில் பல வருடங்கள் எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் இருந்த செங்கோட்டையன் இணைந்தார். தேர்தல் நெருங்கிய போது மாற்று கட்சிகளிலிருந்தும் கூட பலரும் விலகி தவெகவில் இணைந்து எம்.எல்.ஏவாக மாறிவிட்டனர்.
தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தன. இதன் காரணமாக விஜய் முதலமைச்சராகிவிட்டார். அதோடு தங்களுக்கு ஆதரவு கொடுத்த கட்சிகளை விஜய் அமைச்சரவையிலும் இடம் பெற செய்துவிட்டார்..
மேலும், அதிமுகவிலிருந்து 6 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துவிட்டனர். அனேகமாக அவர்கள் வருகிற இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று ஒரு விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக எம்.எல்.ஏக்கள் மேலும் 10 பேர் தவெகவில் இணைய தயாராகவுள்ளனர். அதிமுகவின் நிலைமையை பார்த்து ஏற்கனவே 6 பேர் தவெகவுக்கு வந்துவிட்டனர். அடுத்ததாக 10 பேர் வர தயாராக இருக்கிறார்கள்.. மொத்தமாக 25 பேர் ஒன்றாக வரவும் தயாராகிவிட்டனர் எனவும் அவர் பேசியிருக்கிறார்.