1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. adhav arjuna says dmk cant win without alliance

கூட்டணி இல்லாம ஜெயிச்சி காட்டுங்க பாக்கலாம்!.. திமுகவுக்கு சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா!..

adhav arjuna
திமுக அரசியல் கட்சி துவங்கியதில் இருந்தே கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்தித்து வருகிறது. குறிப்பாக கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தை, பாமக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திமுக பல தேர்தலையும் சந்தித்தது.
2026 சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் கூட்டணி அமைத்து திமுக தேர்தலை சந்தித்தது.

அதில் திமுக தனித்து 59 தொகுதிகளிலும், கூட்டணி சேர்த்து 74 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதேநேரம், யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப்போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகல் வெற்றிபெற்றதால் அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதலமைச்சராகிகிவிட்டார்..

இந்நிலையில், இன்று சட்டசபையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘இன்றைக்கு திமுக எதிர்கட்சியாக இருக்க காரணம் காங்கிரஸ், விசிக, ஐ.யு.எம்.எல், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் இருந்தால்தான். அவர்கள் இல்லையென்றால் 10 தொகுதிகளில் கூட திமுக வெற்றிபெற்றிருக்காது.. சென்னையில் 16 தொகுதிகளில் 14 இடங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. திமுக கூட்டணி கட்சிகளின் வாக்குகள் 15 சதவீதம் உள்ளது.. ஒரு தேர்தலிலாவது தனித்து நின்று 50 இடங்களில் வென்று காட்டுங்கள் பார்க்கலாம்’ என சவால் விட்டிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் லாவா அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட்போன் விராட் வி1 ப்ரோ 5ஜி: பட்ஜெட் விலையில் இவ்வளவு சலுகைகளா?