கரூர் கணக்கு பாக்கி இருக்கு!. விட மாட்டோம்!.. ஆதவ் அர்ஜுனா கோபம்!...
தவெக தலைவர் விஜய் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கரூருக்கு சென்றபோது அங்கே அவரை காண பல்லாயிரம் மக்கள் கூடிவிட்டனர். மதியம் அங்கே வருவதாக சொன்ன விஜய் இரவு 7 மணிக்குதான் வந்தார். இதனால் அவரை பார்ப்பதற்காக பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் என பலரும் கூடிவிட்டனர்.
பிரச்சார வேனின் மீது விஜய் பேசிக்கொண்டிருந்த போது அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசலில் பலரும் சிக்கினர். அதில் 41 பேர் வரை உயிரிழந்தனர். இதற்கு விஜய் தாமதமாக சென்றதே காரணம் என திமுக சொன்னது. சமூகவலைத்தளங்களில் திமுகவினர் விஜயை கடுமையாக விமர்சித்தார்கள். தற்போது கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு முறை தவெக தலைவர் விஜய் டெல்லி சென்று விசாரணையை சந்தித்தார்..
தற்போது விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். இந்நிலையில்தான் இன்று மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணையும் விழா மாமல்லபுரத்தில் நடந்தது. அந்த விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கரூரில் எங்களுக்கு கணக்கு வழக்கு இருக்கிறது.. அதை முடிக்காமல் விடமாட்டோம்.. அங்கே நடந்தது என்ன என்பது விஜயபாஸ்கருக்கு தெரியும்.. சட்டம் தன் கடமையை செய்யும் எனக் கூறியிருக்கிறார். தற்போது தவெக ஆட்சியை கவிழ்க்க சதி நடந்ததாக எழுந்த புகாரில் காவல்துறை செந்தில் பாலாஜியை தேடுவது குறிப்பிடத்தக்கது.