தொடர்புடைய செய்திகள்
- ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் திட்டம்! – தமிழக அரசு ஏற்பாடு!
- சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்! – அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் வலியுறுத்தல்!
- ஓபிசி-க்கு இடஒதுக்கீடு வழக்கில் மத்திய அரசு என்ன செய்யும்? ஜெயகுமார் ஆருடம்!
- திருப்பூரில் சிறுவன் கடத்தல்; வாட்ஸப்பில் ஷேர் ஆனதால் தெறித்து ஓடிய கொள்ளையர்கள்!
- பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள்? – வானிலை அறிவிப்பு!
இயற்கையை அழிக்க அரசு அனுமதிக்கக் கூடாது! – நடிகர் கார்த்தி அறிக்கை
மத்திய அரசின் சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு வரைவிற்கு எதிராக குரல்கள் எழுந்துள்ள நிலையில் நடிகர் கார்த்தி இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசு சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டில் கொண்டுவந்துள்ள புதிய வரைவு-2020 க்கு எதிராக சமூக ஆர்வலர்கள் பலர் குரல் எழுப்பி வருகின்றனர். இதனால் இயற்கை வளங்கள் அழியும் என அச்சம் நிலவுகிறது. அதேசமயம் பாஜகவினர் இதனால் பெரிய பாதிப்புகள் எதுவுமே இல்லை. விதிகளில் மட்டுமே சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. சிலர் தவறான தகவலை பரப்புகிறார்கள் எனவும் கூறி வருகின்றனர்.’
இந்நிலையில் சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு வரைவு குறித்து நடிகர் கார்த்தி நடத்தி வரும் உழவன் ஃபவுண்டேசன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்ட வரைவு சுற்றுசூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது போல தோன்றுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்தியாவின் இயற்கை வளங்கள், மலைகள், காடுகள் ஆகியவை அழிக்கப்படுவதற்கு அரசே அனுமதித்துவிட கூடாது என கேட்டுக்கொண்டுள்ள அவர், அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்த்து தேவையான மாற்றங்களை புதிய வரைவில் கொண்டு வர வேண்டும் எனவும் அறக்கட்டளை சார்பாக கார்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
#EIA2020 pic.twitter.com/GlKDRFXY6Q
— Actor Karthi (@Karthi_Offl) July 28, 2020
அடுத்த கட்டுரையில்
