செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 ஜூலை 2020 (14:59 IST)

சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்! – அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதியளித்துள்ள நிலையில் சினிமா படப்படிப்புகளுக்கும் அனுமதி அளிக்க திரைத்துறையினர் அமைச்ச்ர் கடம்பூர் ராஜூவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அனைத்து தொலைக்காட்சிகளிலும் மெகாத்தொடர்கள் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளன.

இந்நிலையில் சினிமா படப்பிடிப்புகளை தொடங்குவதற்கு அனுமதி வேண்டி திரைத்துறையினர் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இன்று சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்த இயக்குனர் பாரதிராஜா, சுரேஷ் காமாட்சி மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆகியோர் மனுவை அளித்துள்ளனர்.

அதேசமயம் ஜூலைக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சினிமா படப்பிடிப்புகளுக்கு தளர்வுகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.