சென்னையில் பரவலாக மழை!!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்கள், தருமபுரி, காரைக்கால், சேலம் ஆகிய பகுதிகளில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல் மேலடுக்கு சுழற்சியினால் மேலும் 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சூறாவளி காற்று மணிக்கு 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் பரவலாக மழை மேடவாக்கம், செம்பாக்கம், பல்லாவரம், பம்மல், மீனம்பாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தியாகராயநகர், தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.