1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. actor ajith appreciate tamil nadu cm vijay

எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.. தமிழக முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் பாராட்டு...

vijay ajith
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
 
திரு. C . ஜோசப் விஜய் அவர்களுக்கு,
 
பொருள்: தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் முன்னெடுப்பிற்கு பாராட்டு மற்றும் வாழ்த்துகள்
 
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு,
 
தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியவை.
 
குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரத்யேகமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
 
தற்போது மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஈடுபட்டு வரும் ஒருவராக, விண்வெளி வீரர் திரு. நீல் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் புகழ்பெற்ற வார்த்தைகளை சற்றே மாற்றி இவ்வாறு கூற விரும்புகிறேன்:
 
“One small step by the Tamil Nadu Government, one giant leap for Indian motorsports.”
 
மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் அனைத்து முயற்சிகளும் பெரும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் அனைத்து விளையாட்டு முன்னெடுப்புகளும் மாபெரும் வெற்றி பெறட்டும்.
 
நன்றியும் வாழ்த்துகளும்,
 
அஜித் குமார்
About Writer
SIVA
வெப்துனியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வருகிறேன். அரசியல் செய்திகள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, மருத்துவம், பிசினஸ் செய்திகள் எழுதுவேன்..... Read More
அடுத்த கட்டுரையில்
சொறிஞ்சிவிட்டா ரூ.14 லட்சம் வருமானம்!.. புதுசா புதுசா யோசிக்கிறாங்க!...