1200 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தலைமை செயலகம்: முதல்வர் விஜய் அறிவிப்பு...
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், சுமார் ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு முக்கிய கவனம் பெற்றுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் அதிகளவில் பதக்கங்களை வெல்லும் வகையில் சென்னையில் “தமிழ்நாடு ஒலிம்பிக்ஸ் நகரம்” உருவாக்கப்படும் என விஜய் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தமிழகத்தின் ஆட்டோமொபைல் உற்பத்தித் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் “மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்” அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் தமிழக அரசின் பயன்பாட்டுக்கான இடம் குறைவாக இருப்பதால் நிர்வாக ரீதியாக பல்வேறு சிரமங்கள் இருப்பதாக விஜய் குறிப்பிட்டுள்ளார். தற்போது தலைமைச் செயலகம் இரு இடங்களில் செயல்படுவதால், சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் 20 லட்சம் சதுர அடி பரப்பில் 1200 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.' என்றார்.அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
Edited by Siva
