1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A summon to naam tamilar seeman

சீமான் நேரில் ஆஜராக வளசரவாக்கம் போலீசார் சம்மன்: வெளியூர் செல்வதாக சீமான் பதில்..!

சீமான்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை 10:30 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 
 
ஆனால் சீமான் தான் வெளியூர் செல்ல இருப்பதால் செப்டம்பர் 12ஆம் தேதி ஆஜராவதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
நடிகை விஜயலட்சுமி சீமான் மீது அளித்த புகார் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டது என்பதும் இதனை அடுத்து இன்று காலை சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்று காலை 10:30 மணிக்கு அவர் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் தான் வெளியூர் செல்ல இருப்பதால் 12ஆம் தேதி ஆஜராவதாக சீமான் தரப்பு காவல்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளது.  
 
சீமான் 12ஆம் தேதி ஆஜராகும் போது அவர் கைது செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
6-12 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு