வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (21:35 IST)

ஆம்புலன்ஸில் சொந்த ஊருக்கு புறப்பட்டது மாரிமுத்துவின் உடல்

MARIMUTHU
சென்னை விருகம்பாக்கம் இல்லத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மாரிமுத்துவின் சொந்த ஊரான தேனிக்கு புறப்பட்டது அவரது உடல்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து இன்று  மாரடைப்பால் இன்று காலை காலமானார்.  அவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை உலகினர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

நடிகர் மாரிமுத்து, சின்னத்திரை நிகழ்ச்சியான ’எதிர் நீச்சலில்’ நடித்து வந்த நிலையில், இன்று அவரது மறைவுக்கு படக்குழுவினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, கண்ணீர் விட்டு  அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர், அரசியல் தலைவர்கள் , பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் மாரிமுத்துவின் மறைவுக்கு இரங்கல் கூறி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை விருகம்பாக்கம் இல்லத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மாரிமுத்துவின் சொந்த ஊரான தேனிக்கு புறப்பட்டது அவரது உடல்.  நாளை காலை 10 :30 மணிக்கு அவரது சொந்த ஊரில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.