நடிகர் மாரிமுத்து மறைவுக்கு முதல்வர் இரங்கல்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து இன்று மாரடைப்பால் அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் பசுமலை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர், சினிமாவின் ராஜ்கிரணிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன்பின்னர். மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினார்.
அதன்பின்னர், கண்ணும் கண்ணும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் மிஷ்கின் இவரை யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார்.
தொடர்ந்து, நிமிர்ந்து நில், கொபம்பல், மருது ஆகிய படங்களில் நடிகராக முத்திரை பதித்தார்.
சினிமாவில் மட்டுமின்றி, சின்னத்திரையிலும் நடித்து வந்த நிலையில், நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலை காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து மறைந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைதேன். அவரது மறைவு தமிழ்திரையுலகிற்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும். மாரிமுத்துவை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை கூறிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.