வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2023 (13:13 IST)

நடிகை விஜயலட்சுமிக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை..!

நடிகை விஜயலட்சுமிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளாக கடந்த சில நாட்களுக்கு முன்னால் சென்னை போலீஸ் கமிஷனரிடம் சீமான் மீது நடவடிக்கை எடுக்க நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார் 
 
தன்னை சீமான் திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக அந்த புகாரில் அவர் கூறியிருந்தார். இதனை அடுத்து அவரிடம் ராமாபுரம் போலீசார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். 
 
இந்த நிலையில் பதிலடியாக விஜயலட்சுமி மீது நாம் தமிழர் கட்சியினர் தமிழகத்தின் பல பகுதிகளில் புகார் அளித்தனர். இந்த நிலையில் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். 
 
அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று  மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை செய்தனர். இந்த பரிசோதனை முடிவில் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது
 
Edited by Mahendran