1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. A Father committed suicide due to daughter Love issue

மகளுக்கு இன்று திருமணம்: தந்தை தற்கொலை; கதிகலங்கவைத்த காரணம்!!

தூத்துக்குடி
தனது மகள் எவ்வளவு சொல்லியும் கேட்மாமல் வேற்று மதத்தவரை திருமணம் செய்ய முடிவெடுத்ததால் அவரது தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜெயபால்(47). இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 6 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ஜெயபால் சொந்தமாக தொழில் செய்து வந்தார்.
 
இந்நிலையில் இவர்களின் மூத்த மகள், வேற்று மதத்து பையனை காதலித்து வந்தார். இதற்கு ஜெயபால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் தேவி மகளின் காதலுக்கு ஆதரவு தெரிவித்ததோடு அவருக்கு திருமண ஏற்பாடுகளையும் செய்தார். இவர்களுக்கு இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
 
குடும்பத்தில் தன்னை மீறி எல்லாம் போய்விட்டது என்றும் எவ்வளவு சொல்லியும் தன்னை மதிக்காமல் திருமண வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே என்ற மனவேதனையில் இருந்தார் ஜெயபால். நாம் வாழ்வதற்கு செத்தே போகலாம் என முடிவெடுத்து வீட்டில் யாருமில்லா நேரத்தில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
இதில் தவறு அந்த பெண் மீதா? அவருக்கு வக்காளத்து வாங்கிய அவரது தாய் மீதா? அல்லது எதார்த்த உலகத்தை புரிந்து கொள்ளாமல் தன் உயிரை மாய்த்துக் கொண்ட ஜெயபால் மீதா? எது எப்படியாயினும் தன் குழந்தை இந்த உலகிற்கு வந்தது முதலே அவர்களை தேவதை போல பார்த்துக் கொள்ளும் தந்தையை இப்படி கொன்றது தவறு என்று தான் என தோணுகிறது.
அடுத்த கட்டுரையில்
எடப்பாடி-பொன்னார் சந்திப்பில் என்ன நடந்தது ?