திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 19 டிசம்பர் 2018 (17:44 IST)

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக போராடும் மக்கள்: கொடச்சல் கொடுக்கிறதா வேதாந்தா?

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் கழிவுகள் காரணமாக, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என மக்கள் போராட்டம் நடத்தி அது கலவரமாக மாறி 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டு அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
 
இதை எதிர்த்து வேதாந்தா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக வந்ததால் ஆலை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், தமிழக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. 
 
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என 15 கிரமகா மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கியுள்ளனர். 
 
அந்த மனுவில், ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் அங்கு பணியாற்றிய ஊழியர்களின் குடும்பத்தினர் நிதி சுமையால் பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்த 7 மாதங்களாக வருமானம் இல்லாத காரணத்தினால் எங்களது குடும்பம் நிதிச் சுமைக்கு உள்ளாகியுள்ளது. 
வீண் வதந்திகளை நம்பி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடைபெறுகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் சுமார் 4,000 பேர் பணியாற்றுகிறோம். எங்களுக்கு எந்த விதமான நோய் பாதிப்பும் இல்லை. 
 
அப்ப்டியே புற்றுநோய் வந்தால் எங்களுக்குதான் முதலில் வரவேண்டும். தேவை என்றால் எங்களது உடல் நிலையை பரிசோதித்து கொள்ளட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.