1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 13 டிசம்பர் 2018 (13:43 IST)

மகன் டாப் ஹீரோ! ஆனால் அவரது தந்தையோ இன்னும் பஸ் டிரைவர் தான்!

சினிமாவில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தாலே அவரது குடும்பத்தினர் அனைவருமே கோடீஸ்வராக மாறிவிடுகிறார்கள் ஆனால் கன்னட சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருபவரின் அப்பா இன்னும் பஸ் டிரைவராகவே இருக்கிறார்.
பிரபல கன்னட நடிகர் யாஷ் கன்னட சினிமா துறையில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக இருக்கிறார். ஆனால் அவருடைய அப்பா இப்போதும்  பஸ் டிரைவராக தான் இருக்கிறார்.
 
யாஷ் நடித்துள்ள கேஜிஎப் படம், கன்னடம், தெலுங்கு, தமிழில் நேரடியாக வெளியாகிறது. இந்த படத்தை நடிகர் விஷயால் வாங்கி  வெளியிடுகிறார். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடந்தது. அப்போது தான் நடிகர் யாஷின் தந்தை, தனது மகன் கோடிகளில்  சம்பளம் வாங்கினாலும் டிரைவர் பணியையே இன்று செய்து கொண்டிருப்பதை விஷால் தெரிவித்தார்.