வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 15 டிசம்பர் 2018 (13:34 IST)

காதல் விவகாரம் : மகளைக் கொன்ற தாய்! அதிர்ச்சியூட்டும் ரிப்போர்ட்...

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மல்லங்கிணர் கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜாகனி. இவருக்கு ரோஸ்ஜெய ஜென்ஸி என்ற மனைவியும், அபிநயா என்ற மகளும் உள்ளனர். அபிநயா அருகேயுள்ள பகுதியில் உள்ள பிளஸ் 2 படித்து வந்தார்.
அபிநயா அதே பகுதியில் வசிக்கும் ஒரு இளைஞரைக் காதலித்ததாக தெரிகிறது.இது தெரிந்து அவரது அம்மா அபிநயாவை திட்டியுள்ளார். ஆனால் அபிநயா அந்த இளைஞருடன் வெளியில் சென்றுள்ளார்.

இதனால் தாய் மகள் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  ஓருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த ரோஸ் பெற்ற மகள் என்றும் பாராமல் அபிநயாவின் கழுத்தை நெரித்துள்ளார்.இதில் அவர் உயிரிழந்து விட்டார்.
 
இதனால் செய்வது அறியாம்ல் திகைத்த ரோஸ் வீட்டில் இருந்த நமின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்த ராஜகனி,  இருவரும் பிணமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
 
இந்நிலையில் போலீஸார்  இருவரது உடல்களையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.