தொடர்புடைய செய்திகள்
- பார்டரில் பாஸ் ஆன அதிமுக; மெரிட் அடிக்க அதிரடி வியூகம்!!
- ஆட்சி பீடத்தில் துடைப்பத்தை வெச்சிட்டீங்களே! – பாஜக பிரமுகர் வேதனை!
- ரஜினியோட கூட்டணி வைக்கலாம்னு பாக்குறேன்! – பரபரப்பு கிளப்பும் ராமதாஸ்
- நர்சுகளை ரகசியமாக படம் பிடித்த நபர் – பொதுமக்கள் தர்ம அடி!
- விஜய்க்கு ஆதரவாக களம் இறங்கும் வேல்முருகன்! – அரசியல் பயணம் ஆரம்பமா?
பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய ”பர்த்டே பாய்”.. கைது செய்த போலீஸார்
திருவள்ளூரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் புன்னம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அஜித் குமார் என்ற இளைஞர், தனது பிறந்தநாளை கொண்டாட, கிராமத்தில் அமைந்துள்ள சாலையின் நடுவே, பட்டாக்கத்தியால் கேக் வெட்டியுள்ளார்.அப்போது அவர்களது நண்பர்களும் இருந்துள்ளனர்.
இந்நிலையில் சாலையில் கேக் வெட்டி, பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதற்காக அஜித் குமார், விஜய், உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் சென்னை திருவேற்காடு பகுதியில் திருமண நிகழ்வில் பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டிய புது மாப்பிள்ளை புவனேஷ் என்பவரை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
