திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (16:36 IST)

கொரோனாவால் 50,000 பேர் பலி? தப்பிய சீனர் கூறுவது உண்மையா?

கொரோனா வைரஸ் மரணித்தவர்களின் எண்ணிக்கை 50,000த்தை தாண்டும் என பகீர் தகவல் வெளியாகியுள்ளது. 
 
சீனாவின் வூகான் நகரிலிரிந்து பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீன தேசமே வரலாறு காணாத உயிரிழப்பை சந்தித்து வருகிறது. உலக நாடுகள் தங்கள் பிரஜைகளை சீனாவிலிருந்து வெளியேற்றியதுடன், ஹாங்காங் போன்ற தன்னாட்சி நாடுகள் சீனா எல்லையையும் மூடிக்கொண்டுள்ளன. 
 
மிக வேகமாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸால் 1011 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பல நாடுகள் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இருந்தாலும் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. மேலும் 20,000த்திற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில் சீனாவில் உள்ள மருத்துவ குழுக்களும் மருத்துவ வசதிகளை செய்ய முடியாமல் திணறி வருகின்றன.
 
இந்நிலையில், சீனாவில் இருந்து தப்பியோடி அமெரிக்காவில் வசித்து வரும் பிரபல தொழில் அதிபர் குயோ வெங்குயி, சீனாவில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரம் குறித்து கேட்டேன். அங்கு 15 லட்சம் பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாம். இந்த வைரசால் உயிர் இழந்து எரிக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டும் என பகீர் செய்தியை வெளியிட்டுள்ளார்.