புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (11:21 IST)

நர்சுகளை ரகசியமாக படம் பிடித்த நபர் – பொதுமக்கள் தர்ம அடி!

நாகர்கோவில் அருகே நர்சுகள் உடை மாற்றுவதை படம்பிடித்த ஆசாமியை மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

நாகர்கோவில் அருகே ஆசாரிப்பாளையத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இங்கு பணிபுரியும் நர்சுகள் உடை மாற்றிக் கொள்வதற்காக ஓட்டு கட்டிடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று நர்சுகள் உடைமாற்றும் அறை அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்றிருந்திருக்கிறார். பொதுமக்கள் அவரை அழைத்து விசாரிக்கையில் தனது மனைவி நர்ஸ் என்றும், அவருக்காக உடை மாற்றும் அறை அருகே காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். அதை நம்பிய பொதுமக்கள் அங்கிருந்து சென்ற பிறகு செல்போன் கேமராவால் ஜன்னல் வழியாக நர்சுகள் உடை மாற்றுவதை படம் பிடித்துள்ளார். இதை கண்டு நர்ஸ் ஒருவர் அலறவும் ஓடி வந்த பொதுமக்கள் படம்பிடித்த ஆசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பிறகு போலீஸிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்டார். அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீஸார் அதில் இருந்த வீடியோக்களை டெலிட் செய்து, அந்த நபரை சிறையில் அடைத்துள்ளனர்.