1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (12:52 IST)

ஆட்சி பீடத்தில் துடைப்பத்தை வெச்சிட்டீங்களே! – பாஜக பிரமுகர் வேதனை!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிப் பெற்றுள்ளதை தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் விமர்சித்துள்ளார்.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. ஆரம்பம் முதலே பெருவாரியான தொகுதிகளில் முன்னணியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 56 தொகுதிகளிலும், பாஜக 14 தொகுதிகளிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன.

இதனால் கிட்டத்தட்ட ஆம் ஆத்மியின் வெற்றி உறுதியாகியுள்ளது. இதை சிறப்பிக்கும் விதமாக டெல்லியின் பல இடங்களில் ஆம் ஆத்மி தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர். டெல்லியில் ஆம் ஆத்மியின் வெற்றி குறித்து பேசியுள்ள தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் ”ராஜ்ய லட்சுமி எனப்படும் டெல்லி ஆட்சி பீடத்தில் தாமரையை வைக்காமல் மக்கள் துடைப்பத்தை கொண்டு வைத்திருக்கிறார்கள்” என விமர்சித்துள்ளார்.