திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

திருமணமான பெண்ணின் முகம், கல்லூரி மாணவியின் உடல்: 19 வயது வாலிபரின் விபரீத ஆசை

19 வயது வாலிபரின் விபரீத ஆசை
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் திருமணமான பெண்களின் உடலையும் கல்லூரி மாணவிகளின் முகத்தையும் போட்டோஷாப்பில் ஒட்டி விதவிதமான வீடியோக்களை டிக்டாக்கில் பதிவு செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தென்காசியை சேர்ந்த கண்ணன் என்ற வாலிபர் ஒன்பதாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். இருப்பினும் இவர் கல்லூரி மாணவர்கள் போல் டிப்டாப்பாக உடையணிந்து, கல்லூரி மாணவிகளிடம் சகஜமாக பழகி வந்துள்ளார். இவருடைய காதல் வலையில் சுமார் 25 கல்லூரி மாணவிகள் விழுந்ததாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் அந்த கல்லூரி மாணவிகளுடன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்கும் கண்ணன் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை திருமணமான பெண்களின் உடலுடன் இணைத்து போட்டோஷாப் செய்து விதவிதமான ஜல்சா வீடியோக்களை டிக்டாக்கில் பதிவு செய்துள்ளார். இவரது டிக்டாக்வீடியோக்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்துள்ளனர் இதனால் இவருக்கு இலட்சக்கணக்கான ஃபாலோயர்கள் குவிந்துள்ளது. மேலும் இது போல ஆயிரம் வீடியோக்களை ஆயிரம் வீடுகளுக்கு மேல் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
அதுமட்டுமின்றி ஒருசில பெண்களை ஆபாசமாக வீடியோக்களை மார்பிங் செய்து அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவரால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கண்ணன் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் மற்றும் அவரது சகோதரர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். 19 வயதில் 25 பெண்களை காதல் வலையில் வீழ்த்திய வாலிபரால் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது