1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (09:05 IST)

கடனுக்கு சிக்கன் தர மறுத்த கடைக்காரர்: கொரோனா வதந்தி பரப்பிய வாலிபர்

கொரோனா வதந்தி பரப்பிய வாலிபர்
கடலுக்கு சிக்கன் தர மறுத்ததால் அந்த கடையில் சிக்கன் வாங்கினால் கொரோனா வைரஸ் பரவும் என வாலிபர் ஒருவர் வதந்தியை பரப்பி விட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
நெய்வேலியில் சிக்கன் கடை வைத்திருக்கும் ஒருவரிடம் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சிக்கன் வாங்கியுள்ளார். சிக்கலுக்கு கடைக்காரர் பணம் கேட்டபோது மறுநாள் தருவதாக அந்த வாலிபர் கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய கடையில் யாருக்கும் கடன் கிடையாது என்றும் கூறி அந்த சிக்கனை திருப்பி வாங்கி விட்டதாக தெரிகிறது
 
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தனது வாட்ஸ்அப் குழுவில் அந்த குறிப்பிட்ட கடையில் சிக்கன் வாங்கினால் கொரோனா வைரஸ் பரவுகிறது என வதந்தியை கிளப்பி விட்டுள்ளார். இந்த வதந்தியால் நெய்வேலி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கடையில் சிக்கன் வாங்க மக்கள் அச்சப்பட்டதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் இதுகுறித்து சிக்கன் கடைக்காரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வதந்தியை பரப்பியது யார் என்று போலீசார் விசாரணை செய்தனர். அதில் சிக்கன் கடைக்காரரிடம் கடன் கேட்ட வாலிபர் தான் இந்த வதந்தியை பரப்பி விட்டது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். சிக்கன் கடன் தர மறுத்ததால் கொரோனா வைரஸ் குறித்த வதந்தியை பரப்பிய வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது