சிறையில் இருந்த நடிகையை ஒருதலையாக காதலித்த வாலிபர் கைது
நடிகையை ஒருதலையாக காதலித்த வாலிபர் கைது
மோசடி குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் இருந்த நடிகை ஒருவரை தொழிலதிபரின் மகன் ஒருவர் ஒருதலையாக காதலித்து சிறை சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழ் சினிமாவில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வருபவர் நடிகை ஸ்ருதி. இவரும் இவர் தாயாரும் போலியாக ஒரு மேட்ரிமோனியல் இணையதளத்தை தொடங்கி அதன் மூலம் ஆயிரக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ருதி மற்றும் அவரது தாயாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
இந்த நிலையில் சிறையில் இருந்து சமீபத்தில் வெளியே வந்துள்ள ஸ்ருதியை தொழிலதிபர் ஒருவரின் மகன் அமுதன் என்பவர் ஒருதலையாக காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவருடைய தாயாரிடம் அவ்வப்போது வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது
இதற்கு ஸ்ருதி மற்றும் அவரது தாயார் மறுக்கவே ஸ்ருதி முகத்தில் ஆசிட் வீசுவதாக அமுதன் மிரட்டியுள்ளார். இதனை அடுத்து ஸ்ருதி மற்றும் அவரது தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தற்போது அமுதனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மோசடி வழக்கில் சிறை சென்ற நடிகை ஒருவரை ஒருதலையாக காதலித்து சிறைக்கு சென்ற தொழிலதிபர் மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது