வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : செவ்வாய், 3 மார்ச் 2020 (18:55 IST)

இரண்டு காதலிகளுக்கு தாலி கட்டிய வாலிபர் ....பரவலாகும் வீடியோ !

கோவிலில் இரண்டு காதலிகளுக்கு தாலி கட்டிய வாலிபர் ....பரவலாகும் வீடியோ !

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஒரே நேரத்தில் இரு பெண்களை காதலித்து வந்த நிலையில், அவர்கள் இருவரையுமே கோவிலில் வைத்து தாலி கட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 
இன்றைய நவநாகரீக உலகில் காதல் என்பது இளைஞர்களின் கௌரவமாகவே ஆகிவிட்டது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர், ஒரே சமயத்தில் இரு பெண்களைக் காதலித்து வந்துள்ளார். 
 
ஒருகட்டத்தில் இரு பெண்களுக்கும் இந்த விஷயம் தெரிந்துவிட்டது. அதன்பின்னர், இரு பெண்களும் இளைஞரிட வாக்குவாதம் செய்துள்ளனர். அதன்பின், இருவரும் இளைஞரைப் பிரிய மனம் இல்லாமல், அவரைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். 
 
அந்த இளைஞரும் ஒரு கோயிலில் வைத்து இரு பெண்களின் கழுத்தில் தாலி கட்டினார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.  தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.