1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (09:22 IST)

1000 ஆண்களிடம் பெண் குரலில் பேசி பணம் பறித்த நெல்லை வாலிபர்: திடுக்கிடும் தகவல்

1000 ஆண்களிடம் பெண் குரலில் பேசி பணம் பறித்த நெல்லை வாலிபர்
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களுடன் பெண் குரலில் பேசி பணம் பறித்த நெல்லையை சேர்ந்த ராஜ்குமார் ரீகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்
 
சமீபத்தில் சென்னையை சேர்ந்த உதயராஜ் என்பவருக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண் தனக்கு பணம் தரவேண்டும் என மிரட்டியதாகவும் இல்லாவிட்டால் அவர் குறித்த ஆபாச தகவல்களை இணையத்தில் வெளியிடப் போவதாகவும் மிரட்டியுள்ளார்
 
இதனால் அதிர்ச்சி அடைந்த உதயராஜ் உடனடியாக போலீசில் புகார் செய்தார். போலீசார் அவருடைய நம்பரை டிரேஸ் செய்தபோது நெல்லையில் உள்ள ராஜ்குமார் ரீகன் என்ற வாலிபர் தான் இந்த செயலை செய்தது என்பதை கண்டுபிடித்தனர். அவரை கைது செய்து விசாரணை செய்தபோது என்ஜினீயரிங் பட்டதாரியான அவர் கடந்த 5 ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களிடம் பெண் குரலில் பேசி மிரட்டி பணம் பறித்து உள்ளதாக தெரியவந்தது
 
சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இரண்டு பெண்கள் கொடுத்த ஐடியா மூலம்தான் இந்த செயலை அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக செய்து வருவதாக விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்