தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் புதிதாக 3 மேம்பாலங்கள்! – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
- செப்.1 முதல் 200 வார்டுகளிலும் தடுப்பூசி முகாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
- மெரீனா மூடப்படுமா? சென்னை மாநகராட்சி எச்சரிக்கையால் பரபரப்பு
- வீடு தேடிச் சென்று தடுப்பூசி !!!
- பயணிகளுக்கு மாஸ்க் கொடுத்த இண்டிகோ ஏர்லைன்ஸ்: அபராதம் விதித்த சென்னை மாநகராட்சி!
ஞாயிறு அன்று சென்னையில் 1,600 தடுப்பூசி முகாம்
அதன்படி வரும் ஞாயிறன்றும் சென்னையில் 1,600 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு.
தமிழகத்திலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் முகாம்கள் அமைத்து 20 லட்சம் தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து தற்போது மெகா தடுப்பூசி முகாம் 19 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஞாயிறன்றும் சென்னையில் 1,600 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட திட்டமிட்டிருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த ஞாயிறன்று 1,600 முகாம்களில் 1,91,350 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
