திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (08:23 IST)

செப்.1 முதல் 200 வார்டுகளிலும் தடுப்பூசி முகாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தினமும் 200 கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது 
சென்னையில் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது கொரோனா தடுப்பூசிகள் அதிக அளவில் தமிழகத்திற்கு வந்திருக்கும் நிலையில் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதேபோல் 112 கல்லூரிகளிலும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் சென்னையில் 200 தடுப்பூசி முகாம்கள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து http://covid19chennaicorporation.gov.in/covid/gcc_vaccine_center என்ற இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் நேரம் மற்றும் இடத்தை தேர்வு செய்ய gccvaccine.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் 8:30 மணி முதல் மாலை 4 மணி வரை தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.