1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 15 districts schools colleges holiday tomorrow

மாண்டஸ் புயல் எதிரொலி: இதுவரை 15 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!

holiday
மாண்ட புயல் காரணமாக ஏற்கனவே 10 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது 15 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதுமட்டுமின்றி மேலும் சில மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரி விடுமுறை அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மிக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்பதால் மாணவ-மாணவிகள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
பாராளுமன்றத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்!