திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2022 (19:13 IST)

புயலின் போது மின் இணைப்பு துண்டிக்கப்படுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி

Senthil
புயல் கரையை கடக்கும் போது மின்வெட்டு ஏற்படுமா என்ற கேள்விக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் பதில் அளித்துள்ளார். 
 
வங்க கடலில் உருவான புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சூறாவளி காற்று வீசும் என்று கூறப்படுகிறது.
 
 இந்த நிலையில் புயலின் வேகத்தை பொறுத்து மின் இணைப்பு துண்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார் 
 
புயல் காற்றின் வேகத்தை பொறுத்தும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்து தேவைப்பட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மின் இணைப்பை விட மக்களின் உயிர் முக்கியம் என்பதால் அது குறித்து ஆய்வு செய்து அதற்கேற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran