செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 12 நவம்பர் 2021 (12:10 IST)

ஆசிரியர் பாலியல் தொல்லை: கோவை பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

கோவை சின்மயா பள்ளியில் 12-ம் வகுப்பு  படித்த உக்கடம் பகுதியை சேர்ந்த  மாணவி பொன் தாரணி தூக்கிட்டு தற்கொலை தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி என்பவர் கொடுத்த பாலியல் துன்புறுத்தல்தான் மனைவியின் தற்கொலைக்கு காரணம் என அவரது  பெற்றோர், சக மாணவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உக்கடம் காவல் நிறையில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளார். மாணவி இறப்பதற்கு முன்னர் எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.