செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 9 அக்டோபர் 2021 (10:38 IST)

மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுமி… உறவினர்கள் போராட்டம்!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் சிறுமி ஒருவர் வாய்க்காலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் வசித்து வரும் அந்த 13 வயது சிறுமி, அவரது மாமா வீட்டுக்கு சென்று வருவதாக சொல்லியுள்ளார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் அவரை தேட ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து அவர் உறவினர் வீட்டுக்கு அருகே உள்ள தண்ணீர் இல்லாத வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரின் ஆடைகளில் ரத்தக்கறை காணப்பட்டதால் அவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து போலிஸாருக்கு தகவல் சென்றதும் அவர்கள் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அழைத்து சென்றுள்ளனர். சில இளைஞர்களை பிடித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில் சிறுமியின் சடலத்தை ஒப்படைக்க சென்ற போது கொலைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி 2 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை பட்டது. போலிஸார் உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் சடலத்தை வாங்கிக் கொண்டு கலைந்து சென்றனர்.