புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Updated : புதன், 22 செப்டம்பர் 2021 (16:28 IST)

மாணவிக்கு செல்போனில் பாலியல் தொல்லைக் கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர்!

புதுக்கோட்டையில் தனியார் பள்ளி ஆசிரியர் மாணவிக்கு செல்போன் வழியாக பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மறுப்பினி சாலையில் உள்ள தனியார் பகுதியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சண்முகநாதன். இவர் அதே பள்ளியில் 11 ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி ஒருவருக்கு செல்போன் மூலமாக பாலியல் தொந்தரவுக் கொடுத்துள்ளார்.

இது சம்மந்தமாக மாணவியின் பெற்றோர் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு மையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் போலிஸார் அம்மாணவியின் செல்போனில் ஆசிரியர் அனுப்பிய ஆடியோ உரையாடல்களை வைத்து இப்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.