1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 10 feet pathole in Tiruvallur school

திடீரென தோன்றிய 10 அடி பள்ளம்: திருவள்ளூர் பள்ளியில் பரபரப்பு!

tiruvallur
திடீரென தோன்றிய 10 அடி பள்ளம்: திருவள்ளூர் பள்ளியில் பரபரப்பு!
திருவள்ளூரில் உள்ள அரசு பள்ளியில் திடீரென 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று  திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென பத்தடி ஆழத்தில் பள்ளம் தோன்றியது 
 
இதனை அடுத்து மாணவர்கள் பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர். இதனை அடுத்து நிலையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாகவும் பள்ளி கட்டடம் முழு அளவில் ஆய்வு செய்ய உள்ளதாகவும் பள்ளி கட்டடம் சீரமைக்கப்பட்ட பின்னரே மீண்டும் பள்ளி தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
மூன்று மாடி கொண்ட கட்டிடத்தில் திடீரென அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு; தகவல் தந்தால் சன்மானம்! – மாசுகட்டுப்பாட்டு வாரியம்!