1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Students complain aginst a teacher abou abuse

பாலியல் தொல்லை; துணிந்து புகாரளித்த மாணவிகள்! – கம்பி எண்ணும் ஆசிரியர்!

Tamilnadu
சமீப காலமாக பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் ஈரோட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோவை மற்றும் கரூரில் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள், மாணவிகள் பாலியல் தொல்லை குறித்து புகாரளிக்க உதவி எண் அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் காலங்களில் அந்த எண்களை பள்ளி பாட புத்தகத்திலேயே அச்சிடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் திருமலைமூர்த்தி மீது முன்னாள் மாணவிகள் 3 பேர் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பான விசாரணையில் திருமலைமூர்த்தி மீது குற்றம் உறுதியான நிலையில் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை!