தொடர்புடைய செய்திகள்
- இரண்டு குழுவாக பிரிந்து சென்று ஆய்வு! - மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடும் மத்திய குழு!
- அம்மா மருத்தகங்களை மூடவில்லை; எடப்பாடியார் தெரியாமல் பேசுகிறார்! – அமைச்சர் விளக்கம்!
- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; டெல்டா மாவட்டங்களில் மழை வாய்ப்பு!
- இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை?
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
பள்ளி மதிப்பெண் சான்றிதழில் பயிற்று மொழி சேர்ப்பு! – தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு!
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பயிற்று மொழியை சேர்க்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு பணியில் 20% இட ஒதுக்கீடு என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களின் பயிற்று மொழி குறித்த விவரங்களை அறிவதற்காக நடப்பு கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மாணவர்களின் பயிற்று மொழி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 10ம் வகுப்பு வரை வகுப்புவாரியாக மாணவர்கள் எந்த பயிற்று மொழியில் பயின்றனர் என்பது அதில் இடம்பெறும் என்றும், மாணவர்களின் பயிற்று மொழி விவரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் இணையத்தில் பதிவேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
