1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 20 நவம்பர் 2021 (12:01 IST)

பள்ளியில் பாலியல் தொல்லையா? புகார் அளிக்க புதிய எண்

குழந்தைகளுக்கு எதிரான சர்வதேச வன்முறை தடுப்பு நாளை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி பணிமனையை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளிகளில் பாலியல் ரீதியான புகார்கள் வரும் போது பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படும் என நினைத்து பள்ளி நிர்வாகம் அதை மூடி மறைக்க முயற்சி செய்யக்கூடாது.
 
மேலும், பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்து புகார் தெரிவிக்க 14417 என்ற உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உதவி எண்ணை வரும் காலங்களில் பாட புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சடிக்க திட்டமிட்டுள்ளோம்.
 
மாணவர்கள் இந்த எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்க ஒருங்கிணைந்த புகார் மையம் செயல்படுகிறது. இதில் வரும் புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டார்.