தொடர்புடைய செய்திகள்
- அடுத்த 2 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை!
- தன் படத் தயாரிப்பாளர்களுக்கு வித்தியாசமாக உதவும் விஜய் ஆண்டனி!
- சென்னை காவல் ஆணையருக்கு திடீர் நெஞ்சுவலி! – மருத்துவமனையில் அனுமதி!
- டாக்டர் படத்தால் சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட மறைமுக லாபம்!
- கோவில்கள் எல்லா நாளும் திறக்கலாம்; அரசு அனுமதி! – கொண்டாட்டத்தில் பக்தர்கள்!
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 1,259 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 26,83,396 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1,259 பேர்களில் 163 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 20 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 35,853 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்று 1,438 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 26,32,092 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 1,37,423 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 490,17,492 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
அடுத்த கட்டுரையில்
