ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 14 அக்டோபர் 2021 (16:50 IST)

தன் படத் தயாரிப்பாளர்களுக்கு வித்தியாசமாக உதவும் விஜய் ஆண்டனி!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தன் படத்தின் தொலைக்காட்சி விநியோக உரிமையை விற்பனை செய்வதில் தயாரிப்பாளர்களுக்கு உதவியாக இருக்கிறாராம்.

இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி, 'நான்' என்ற படத்தின் மூலம் ஹீரோவாகி அதன்பின்னர் பல வெற்றி படங்களை கொடுத்த நிலையில் சற்றுமுன் அவர் நடித்து வரும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனியின் புதிய படத்திற்கு 'தமிழரசன்' என்ற தலைப்பு வைக்கப்பட்டு மொத்த படமும் முடிந்து ரிலிஸுக்கு தயாராக உள்ளது.

சினிமா தொழிலின் அனைத்து துறைகளிலும் ஆர்வம் காட்டும் விஜய் ஆண்டனி, தன்னை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு சகாயம் செய்துவருகிறாராம். அது என்னவென்றால் தன் படங்களை தொலைக்காட்சி உரிமை விற்பனை செய்வதில் தயாரிப்பாளர்களுக்கு உதவியாக இருக்கிறாராம். இது சம்மந்தமாக ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துடன் அவருக்கு நல்ல நட்பு இருக்கிறதாம்.